அதர்வா நடித்து ‘ஈட்டி’ என்கிற ஒரே ஒரு படம்தான் ஹிட். ஆனாலும் மார்க்கெட்டில் தெம்பாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிற அளவுக்கு அழைப்புகளும், வியாபாரமும் இருந்து வருவது அதிசயத்திலும் அதிசயம். இந்த நிலையில்தான், அதர்வாவுடனும் ஜோடி போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் த்ரிஷா. ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து அதர்வா வெளியே வருகிற நேரத்தில் உள்ளே என்ட்ரி ஆனாராம் த்ரிஷா. இருவரும் நேருக்கு நேர் மீட் பண்ணிக் கொண்டார்கள்.

“ஏன்… என் கூடவெல்லாம் சேர்ந்து நடிக்க மாட்டீங்களா? நயன்தாராவுடன்தான் நடிப்பீங்களா?” என்று த்ரிஷா சிரித்துக் கொண்டே கேட்க, “ஐயோ… அந்த படத்துல அவங்க எனக்கு ஜோடியில்ல… அக்கா கேரக்டர்” என்று அவசரம் அவசரமாக மறுத்தாராம் அதர்வா. “ஏன் அந்த ரோல்ல நான் நடிக்க மாட்டேனா?” என்று த்ரிஷா மறுபடியும் மடக்க…. “இன்னைக்கே உங்களுக்கு சொல்றேன்” என்றபடி நகர்ந்தாராம் அதர்வா.

த்ரிஷாவே நினைத்திருக்க மாட்டார் அதர்வாவின் போன் வரும் என்று. நல்ல செய்தியோடு வந்தது போன். அதர்வாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா. ஆனால் ஜோடியல்ல… என்பதுதான் இப்போதைய நிலவரம்!