fbpx
Connect with us

Cinemapettai

அமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே..! அதிரடி அரசியல் ஆரம்பம்

adangathey

News | செய்திகள்

அமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே..! அதிரடி அரசியல் ஆரம்பம்

அமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே

மணிவண்ணன் இயக்கத்தில் 25 வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்த அமைதிப்படை படத்தைப் பற்றி இன்றும் கூட மக்கள் பேசுவார்கள். எங்களுடைய அடங்காதே படமும் அதே மாதிரி பல வருஷம் கழிச்சி பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ஆரம்பிக்கிறார் அதன் படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.

இந்த படத்தில் சரத்குமார் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எந்த ஒரு அறிமுக இயக்குனரும் இந்தப் படத்தை எடுக்கத் தயங்குவார்கள். ஆனால் தயாரிப்பாளரும் ஹீரோவும் கொடுத்த சுதந்திரம்தான் இந்தப் படத்தை நினைத்த மாதிரி எடுக்க முடிந்தது. சரத்குமார் இதில் ஒரு அரசியல்வாதியாக வருகிறார். நிஜ வாழ்க்கையிலும் அதேபோல் அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறார் என்று தொடர்கிறார் சண்முக சாமி.

ஜீவி பிரகாஷ் பற்றி பேசும்பொழுது’ ஜிவி பிரகாஷ் என் நண்பர் மட்டும் இல்ல அதுக்கும் மேல் வெல்விஷர். பென்சில் படத்தில் நான் இணை இயக்குனராக வேலை செய்தபோது அவருக்கு முதல் வசனத்தை சொல்லிக் கொடுத்தேன் பின்பு அவர் தயாரித்த மதயானைக்கூட்டம் படத்தில் பார்த்துவிட்டு என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னேன். அதிலிருந்து எங்களின் நட்பு தொடர்ந்தது, இம்ப்ரஸ் ஆனார். ஷான் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார் அப்படி வந்ததுதான் இந்த கதை.

GV Prakash

கதையை ஜிவி ஓகே செய்ததும் இந்த கதையை ஜாக்சன் துறை தயாரிப்பாளர் ஸ்ரீ கிரீன் சரவணனிடம் சொல்ல சொன்னார், அவருக்கு கதை பிடித்து இருந்தது. ஆனால் அறிமுக இயக்குனர் இந்த படத்தை எடுக்க முடியுமா என்று யோசித்தார். ஆனால் ஜிவி பிரகாஷ்தான் என்னை நம்பி ஷானிடம் இந்த படத்தை கொடுங்கள் ராஜமௌலி மாதிரி வரக்கூடியவர் என்று கூறினார். ஜிவி பிரகாஷ் இந்தப்படத்தில் சம்பளம் முதற்கொண்டு நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்தார்.

படத்தின் டைட்டில் பற்றி பேசும்பொழுது’ இந்தியா என்ற மூன்று வர்ணங்கள் சேர்ந்து நாடு அதை கலராக மாற்றும்பொழுது என்னவாகும் என்பதுதான் படத்தோட ஒன் லைன். 14 வருட இடைவெளிக்குப்பின் மந்திரா பேடி மறுபடியும் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். விஜயசாந்தி மாதிரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார் சண்முகம் முத்துசாமி. வெற்றியடைய வாழ்த்துகள்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top