அடங்கமறு திரைவிமர்சனம்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அடங்கமறு திரைவிமர்சனம்.!

Reviews | விமர்சனங்கள்

அடங்கமறு திரைவிமர்சனம்.!

அடங்கமறு திரைவிமர்சனம்

ஜெயம் ரவி சமீபகாலமாக நல்ல கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் உறுதியாக இருக்கிறார் அந்த வகையில் டிக் டிக் டிக் படத்தைத் தொடர்ந்து தற்போது அடங்கமறு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது  இவரின் படத்தில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்து நடித்து வருகிறார் அப்படி அடங்கமறு திரைப்படத்தில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று பார்க்கலாமா.?

படத்தின் கதை

படத்தில் ஜெயம் ரவி ஒரு போலீஸ் அதிகாரி இவர் எப்படியாவது ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என்று நினைப்பில் இருப்பார் அதற்காக போலீஸ் வேலையில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார் இந்த நேர்மை  இவரை எந்த அளவுக்கு மோசமாக கொண்டு செல்கிறது என்பது  தான் படம். முன்பு ப்ரோமோ வீடியோவை பார்த்திருப்போம், அதில் ஜெயம் ரவி அமைச்சர் பையனாக இருந்தாலும் ரூல்ஸை மீறினால் அடித்து தும்சம் செய்வார், அதனால் அந்த அமைச்சர் பையனை அடித்து துவம்சம் செய்யும் தைரியமாக இளைஞராக ஜெயம் ரவி இருப்பார்.

இவருக்கு அன்பான காதலி அழகான குடும்பம் மிகவும் பிடித்த வேலை என வாழ்க்கையை நகர்த்தி வருவார், அந்த சமயத்தில் ஒரு கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள் ஆனால் அதை போலீஸ் தற்கொலை என கேஸை மூடி வைக்கிறார்கள் அந்த கேஸ் ஜெயம் ரவி கையிலெடுக்க அவரின் வாழ்க்கை பயணமே திசைமாறுகிறது ஒரு காலகட்டத்தில் போலீஸ் வேலையை கூட விடுமளவிற்கு அவருக்கு சூழ்நிலை வரும்.அந்த கற்பழித்த கும்பல் எப்படி வேட்டையாடுகிறார் ஜெயம்ரவி என்பதுதான் மீதிக்கதை.

படத்தை பற்றி

ஜெயம் ரவி என்றாலே கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருப்பார் அதேபோல் இந்த படத்திலும் ஒரு அழுத்தமான கதை இருக்கிறது தனி ஒருவன் மித்திரன் நிமிர்ந்து நில் அரவிந்தனையும் சேர்ந்தது போல் நடித்துள்ளார் ஜெயம் ரவி, தன் குடும்பத்தில் நடக்கும் இழப்பிற்கு கதறி அழும் காட்சிகள் அனைத்தும் நம்மளை கலங்க வைக்கும்.

படத்தில் ராசி கண்ணா தனது கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு என்றே சொல்லலாம் அலட்டல் இல்லாத நடிப்பு, ராஷி கண்ணா வரும் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கும், இவரைத் தொடர்ந்து முனீஸ்காந்த் மைம் கோபி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்துள்ளார்கள்.

சுதந்திரம் என்பது ஒரு பெண் தனியாக இரவில் நடந்து செல்வது தான் சுதந்திரம், என மையக் கருவை வைத்து கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர்  ஆனால் இங்கு இரவில் ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடியவில்லை என்பதை பரபரப்பாக திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஆனால் பல படங்களில் காட்சிகள் நம் கண்முன்னே வந்து செல்லும் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இடைவெளிக்குப் பிறகு பரபரப்பான கதை இருந்தும் இது அந்த படத்தின் கதை போல் உள்ளது என்று நினைக்க வைக்கிறது, படத்தில் ஏதோ மிஸ் ஆன பில் இருக்கும்அதேபோல் ஒரு வில்லனை வீடியோ கேம் மூலம் கொள்வது என்பது புதிதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் செயற்கைத்தனம் வருவதை தவிர்க்க முடியவில்லை, படத்திற்கு பக்கபலமாக இருந்தது பின்னணி இசைதான், சிஎஸ் சாம் இசையில் மிரட்டியுள்ளார்.

மேலும் ஜெயம் ரவி ஒட்டுமொத்த சார்வரையும் தனது நண்பருடன் சேர்ந்துகொண்டு ஹேக் செய்வது கொஞ்சம் லாஜிக் மீறல் ஆக இருக்கிறது, இதற்கு முன் பார்த்த கதாபாத்திரம் என்றாலும் ஜெயம் ரவி ஒட்டுமொத்த படத்தையும் தனியாக தாங்கி நிற்கிறார்.

அடங்கமறு : 2.5/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top