தமிழ் சினிமாவில் விறுவிறுவென பல படங்களில் நடித்து முன்னணி நடிகையான ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை. ஒரு மலையாள படத்தில் நடிக்க பேசினார் ஹன்சிகா. ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லை. இதனால் மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.

அதிகம் படித்தவை:  பாலிவுட் நடிகையுடன் ஊர் சுற்றும் கே.எல்.ராகுல். காதலா ? டேட்டிங்கா ? நட்பா ? பரவும் கிசு கிசு !

இந்த நிலையில், தேவி படத்தை அடுத்து யங் மங் சங் படத்தில் நாயகனாக நடித்து வரும் பிரபுதேவா, அதையடுத்து கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பில் வில்லனாக நடிக்கிறார். அதோடு, விஷால்-கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்குகிறார்.

அதிகம் படித்தவை:  விரைவில் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வு : யாருக்கு வாய்ப்பு அதிகம்...

அந்த படங்களை முடித்ததும் ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் பிரபுதேவா. அந்த படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேசிவருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.