Tamil Cinema News | சினிமா செய்திகள்
50 வயதுக்கு மேல் ஆகியும் குழந்தையை பெற்றெடுத்த நடிகைகள்.. அடேங்கப்பா!
தமிழ் சினிமாவில் 80s, 90s களின் டாப் ஹீரோயினாக இருந்தவர் நடிகை ரேவதி. ரேவதி நிறைய தமிழ் படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.
ரேவதி 1986 ஆம் ஆண்டு ‘சுரேஷ் மேனன்’ என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். ரேவதி சுரேஷ் மேனன் ஜோடி டாப் ஜோடி என்று கூறுமளவிற்கு நல்ல பெயர் பெற்றிருந்தனர். ஆனால் 2005ஆம் ஆண்டு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013ல் டைவர்ஸ் பெற்று பிரிந்துவிட்டனர்.
சமீபகாலமாக ரேவதி எங்கு சென்றாலும் கையில் ஒரு குழந்தையோடு வலம் வந்தார். யார் இந்த குழந்தை? என்று கேட்போரிடமெல்லாம் அமைதியாக மவுனம் சாதித்தார் நடிகை ரேவதி. ரேவதி இந்த விஷயத்தை இனிமேல் மூடி மறைக்க முடியாது என்று யோசித்து உண்மையை உடைத்து கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டிலிருந்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவரால் எப்படி குழந்தை பெற்றெடுக்க முடியும்? மற்றும் இவர்கள் 50 வயதை தாண்டி இருக்கும் பட்சத்தில் எவ்வாறு இந்த குழந்தை பிறந்தது? என்று கேள்வி கேட்பவரின் வாயெல்லாம் அடைக்கும் வண்ணம் ஒரே பதிலை நெத்தியடியாய் அளித்துள்ளார்.
இந்தப் பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான் என்றும், டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மூலமாக பிறந்த குழந்தை என்றும் தெரிவித்துள்ளார்.
ரேவதியின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால், இன்னொரு ஜீவனுக்காக வாழ வேண்டுமென்று அவர் முடிவெடுத்து இருந்தாராம். மேலும் தனிமையில் வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று யோசித்து இந்த முடிவை மேற்கொண்டாராம் நடிகை ரேவதி.
இதை அறிந்த ரேவதியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் 50 வயதுக்கு மேல் உள்ள நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
