Tamil Cinema News | சினிமா செய்திகள்
நக்மா, ஜோதிகா உடன்பிறப்புகள் இல்லையாம்? அதிர்ச்சியில் தலை சுற்றிய ரசிகர்கள்
80-களில் அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவை ஒருகை பார்த்தனர். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களின் மனதை அள்ளி அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர்கள்.
அந்த வகையில் இன்னொரு சகோதரிகளாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் ஜோதிகா மற்றும் நக்மா. ஜோதிகாவுக்கு முன்னரே நக்மா தமிழ் சினிமாவுக்குள் வந்து விட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என இந்தியாவில் உருவாகும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நாயகியாக விளங்கியவர்.
அதேபோல் ஜோதிகாவையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தல அஜித்துடன் வாலி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி இருப்பார். அதனைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனார்.
ஆனால் தளபதி விஜய்யுடன் அவர் நடித்த குஷி திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக மாறினார். பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் நக்மா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிரபல தயாரிப்பாளரான சந்தர் சாதனா என்பவருக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவிக்கு பிறந்தவர்தான் நக்மா.
இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் ஒருவர்தான் ஜோதிகா. இருந்தாலும் இருவருக்குள்ளும் நல்ல ஒரு புரிதல் உள்ளது. அந்த வகையில் ஜோதிகா வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களையும் தவறாமல் நக்மா கலந்து கொள்கிறார்.
