பலான தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. சினிமாத்துறைக்கு வந்த கெட்ட பெயர்

சினிமாவில் பிரபலமான நடிகைகள் கூட திடீரென்று ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி சின்னாபின்னம் ஆகின்றனர். சில டாப் நடிகைகளை கையும் களவுமாக பிடித்தும் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக கடைசி நேரத்தில் விட்டுவிட்ட தகவல்களும் வெளிவந்தன. இதில் 5 நடிகைகள் பலான தொழில் செய்த வழக்கில் கைதாகி சினிமா துறைக்கு அவபேரு வாங்கி கொடுத்திருக்கின்றனர்.

புவனேஸ்வரி: பிரபல மாடலான இவர், சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளைப் பெற்று, அதன் பிறகு வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்கள் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

actress-bhuvaneshvari
actress-bhuvaneshvari

தெலுங்கு நடிகையான இவர், சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். ஒருகட்டத்தில் மார்க்கெட்டை இழந்த புவனேஸ்வரி விபச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில், போலீசார் அவரை பொறி வைத்து கையும் களவுமாக பிடித்தது.

இவருடன் மேலும் இரு அழகிகளும் கைதாகினர். அதன்பிறகு இந்த வழக்கில் புவனேஸ்வரி புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அவர் அளித்த பரபரப்பான வாக்குமூலம் பெரும் பிரச்சினை ஆனது. பிறகு சிறையிலிருந்து வெளிவந்த புவனேஸ்வரி ஒரு கட்சியில் பொதுச் செயலாளராக ஆனார். விபச்சார வழக்கில் மற்றொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

வினிதா: 90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை வினிதா நடித்த படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் அடித்தது. இவர் நடிப்பதை மட்டும் சரியாக செய்திருந்தால் வேற லெவலுக்கு சென்றிருக்கலாம்.

vinitha
vinitha

ஆனால் சினிமாவில் பிரபலமானவை வைத்து இவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டு, விபச்சார தடுப்பு போலீசார் விரித்த வலையில் சிக்கி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இவருக்கு பலான தொழில் நடிகையாக முத்திரை குத்திவிட்டனர்.

மாதுரி: 80, 90-களில் தமிழ், மலையாளம் மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்த இவர், நடிகைகள் பலரும் தயங்கிய ஏ சான்றிதழ் பெற்ற படங்களிலும் துணிச்சலாக நடித்து பிரபலமானார். இவர் பிரபல நடிகை லலிதா ஸ்ரீயின் சகோதரி ஆவார். மலையாளத்தில் பெரும்பாலான படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு 1985-ல் தமிழ் பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது.

madhuri
madhuri

அதிலும் விஜயகாந்துடன் மாதுரி நடித்த ‘அன்னை என் ஆலயம்’ இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் குணச்சித்திர நடிகையாக மலையாளம் தமிழில் பிரபல நடிகையாக கால்பதித்த நடிகை மாதுரி விபச்சார வழக்கில் சிக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

இவர் மீது சிலர் ஆந்திரா பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டினர். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு, அதன் பிறகு வெளியில் வந்து மறுபடியும் ஒரு விபச்சார வழக்கில் சிக்கி சின்னாபின்னமானார்.

தேவி பிரியா: 90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத வில்லியான இவர், இயக்குனர் பாரதிராஜா சீரியலில் நடித்த பிறகு பெரிதும் பிரபலமானார். அதன் பிறகு இயக்குனர் கங்கை அமரனின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த தேவிப்பிரியா அதன்பிறகு வாலி, வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததுடன் சினிமாவில் பல சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் விபச்சார தொழிலில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் பதியப் பட்டது. இருப்பினும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் படு மோசமானவை. ஆனால் வழக்கு என்ன என்று வெளிவராமல் காதும் காதுமாக வைத்து முடித்துவிட்டனர்.

சுவேதா பாசு: சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தோன்றி அதன்பிறகு வங்காளம், தெலுங்கு, தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 2002 ஆம் ஆண்டு இவர் நடித்த மக்தீ என்ற திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இந்திய தேசிய விருதை பெற்ற  இவர் தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்தில் நடித்திருப்பார்.

swetha-basu
swetha-basu

ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்யும் போது போலீசார் இவரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது வலையில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் விழுந்து உள்ளனர். ஆகையால் அரசியல் பலமும் பண பலமும் பெற்றிருக்கும் இவரை, எத்தனை முறை போலீஸ் கைது செய்தாலும் அவருடைய வாடிக்கையாளர்களின் பெயரை மட்டும் போலீஸ் விசாரணையின்போது வெளியில் சொல்வதில்லை.

இவ்வாறு விபச்சார வழக்கில் கைதான எந்த நடிகைகளும் நினைவு தெரிந்த வரை யாரும் தண்டிக்க பட்டதாக தெரியவில்லை. அவர்களது கைது மட்டுமே பரபரப்பாக பேசப்படும். அதன்பிறகு வழக்கு நீர்த்துப் போய்விடும். இருப்பினும் இவர்களால் சினிமாவிற்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

Next Story

- Advertisement -