செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நயன்தாராவுக்கு ஆதரவாக இறங்கிய நடிகைகள்.. லிஸ்ட்ல தனுஷ் பட ஹீரோயின்களும் இருக்காங்களே!

Dhanush : இன்றைய தினம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நயன்தாரா விட்ட அறிக்கை தான். அதாவது நயன்தாரா திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று நிமிட காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

இதற்காக பத்து கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் விட்டதாக நயன்தாரா கூறியிருக்கிறார். அதற்கான கண்டனத்தையும் தனது இன்ஸ்டா பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். சினிமா வட்டாரத்தில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவாக பல நடிகைகள் இந்த பதிவின் கீழ் லைக் செய்துள்ளனர்.

அந்த வகையில் தனுஷ் பட நடிகையே பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதாவது கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனுஷ் உடன் இணைந்து 3 படத்தில் நடித்திருந்தார். இப்போது இவர் நயன்தாராவுக்கு ஆதரவாக சல்யூட் செய்துள்ளார்.

தனுசுக்கு எதிராக மாறிய நடிகைகள்

அதேபோல் தனுஷ் உடன் மரியான் படத்தில் நடித்த பார்வதி, நையாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா, கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மற்றும் வடசென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நயன்தாராவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

அதோடு மஞ்சுமா மோகன், ஈஷா தல்வார், அனாபென், ஐஸ்வர்யா லட்சுமி, அஞ்சு குரியன் மற்றும் அதிதி பாலன் ஆகியோரும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்துள்ளனர். இவ்வாறு பல நடிகைகள் தனுசுக்கு எதிராக படை எடுத்து இருக்கின்றனர்.

nayan-insta
nayan-insta

தனுஷ் தரப்பில் இருந்து கூறப்படுவது நயன்தாரா ஏற்கனவே கல்யாண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முற்பட்டார். மேலும் எல்லா ஷார்ட்டும் எடுத்த பிறகு நெட்ஃபிளிக்ஸுக்கு திருப்தி இல்லாததால் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை சேர்க்க விரும்பியது.

ஏனென்றால் இதுதான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலின் தொடக்கமாக அமைந்தது. இதற்காக என் ஓ சி தனுஷிடம் இருந்து கேட்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தனுஷ் நஷ்டம் அடைந்ததால் இவ்வளவு பெரிய தொகை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News