இந்தியில் தனுஷ் கதாநாயனாக நடித்த ராஞ்சனா படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் தனுஷ் தோழியாக நடித்தவர் நடிகை ஸ்வரா பாஸ்கர்.


இவர் தற்போது இந்தியில் நடிகர் சல்மான் நடித்துள்ள பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ராஜ்கோட் விமான நிலையம் சென்ற போது அங்கு எங்களை பார்ப்பதற்காக கூட்டம் கூடிவிட்டது.

அப்போது கூட்டத்தில் நின்றவர்கள் சிலர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்கள். இதனால் நான் நிலைகுலைந்து போனேன். அனுபம்கேர் சார் தான் என்னை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பினார். கூட்டம் என்று வந்துவிட்டால் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் 300 திரையரங்குகளில் தணிக்கை பெற்று வெளியாகும் தொண்டன்!


மேலும் நான் மும்பைக்கு வந்த வருடம் ரயிலில் மதிய வேளையில் முதல் வகுப்பில் பயணம் செய்து செய்தேன். அப்போது அந்த பெட்டியில் ஏறிய ஆசாமி ஒருவர் போதையில் இருந்தார். அந்த பெட்டியில் கூட்டம் இல்லாததை பயன்படுத்திய ஆசாமி திடீரென சுய இன்பம் அனுபவிக்க தொடங்கி விட்டார்.

அதிகம் படித்தவை:  தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ் இந்த சீரியல் நடிகையை திருமணம் செய்துகொள்கிறார்.

இதனால் பயந்து போய் அந்த ஆசாமியை திட்டி கையில் வைத்திருந்த குடையால் அடித்து விட்டேன். போலீசில் பிடித்து கொடுப்பதற்காக அந்த ஆசாமியின் சட்டையை பிடித்து இழுத்தேன். அதற்குள் அவன் சுதாரித்து கொண்டு என் கையை உதறிவிட்டு தப்பிவிட்டான்.


பெண்களை ஒரு போதை பொருளாக பார்க்கும் வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து கொண்டே தான் இருக்கும். பெண்கள் தான் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.