சில மாதங்களுக்கு முன்பு பெரிய நம்பர் ஹீரோயின் தாக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்து அதனை மறுத்தார்கள். இப்போது அது உண்மைதான் என்கிறார்கள். இதன் காரணமாக நடிகைக்கு இப்போது நான்கு பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பவுன்சர்கள் நான்கு பேரும் நேரடியாக காதலரின் கட்டுப்பாட்டில் பணிபுரிகின்றனராம். பொதுவாக ஹீரோக்கள்தான் பவுன்சர்கள் வைத்துக்கொள்வார்கள். அதுவும் விழாக்களுக்கு வருவதற்கு மட்டும்தான்.

ஆனால் நடிகையோ படப்பிடிப்பு தளத்துக்கே பவுன்சர்களுடன்தான் வருகிறாராம். நடிகையை ரசிகர்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றவா? அல்லது பிற ஹீரோக்களின் அனாவசிய டார்ச்சர்களிடம் இருந்து காப்பாற்றவா?