Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் படத்தில் ஜோடி போட முடியாத ஏக்கத்தை தனித்த தனுஷ்.. படு குஷியில் பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து விதவிதமான படங்களை கொடுப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவரது நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேபோல் தனுஷும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய நடிப்பால் பெருமளவு பூர்த்தி செய்து தான் வருகிறார்.
இந்த நிலையில் தனுஷ் படத்திலிருந்து இந்த ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ‘ஆக்க்ஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் ஐஸ்வர்ய லட்சுமி தனுஷுடன் இணைந்து ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம். இந்தப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, ஐஸ்வர்யா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்திற்கு முன்பாகவே அனேகன் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அந்தப் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

aishwarya-lekshmi-cinemapettai
அந்தப் படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா சிறப்பாக பொருந்தினாலும், ஐஸ்வர்யாவுக்கு பிராமண பாஷை சரியாக பேச வராததால் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டாராம். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
