தெலுங்கில் பிரபல திரைப்பட இயக்குநருடனான தொடர்பை, அந்த இளம் நடிகை மீண்டும் புதுப்பித்துள்ளாராம்.

தமிழில் வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ஹீரோயினாக நடித்தார் அந்த இந்தி பேசும் நடிகை. அவர் அப்படியே தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

எப்போதாவது, பிற மொழி படங்களிலும் நடிக்கும் இந்த அம்மணிக்கு தற்போது மார்க்கெட் சரியில்லை. அம்மணியும், பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவரும் காதலித்தார்கள்.

இந்த காதலுக்கு இயக்குநரின் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பின்னர், இயக்குநருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் கழித்து மீண்டும் இருவரும் தங்கள் காதலை புதுப்பித்து ரகசியமாக வைத்திருந்தனர்.

தற்போது, நடிகையின் திடீர் சமூக வலைதள அறிவிப்பால் அந்த காதல் புதுப்பிக்கப்பட்டது ஊருக்கே தெரிந்துவிட்டது.