ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் சொதப்பிய திரைப்படமாக மாறியது ஐ. விக்ரம் உழைப்புக்காகவாவது இந்தப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றிருக்கலாம்.
அந்த அளவுக்கு அந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னுடைய உடலை ஏற்றி இறக்கி விடவும் கஷ்டப்பட்டு நடித்தார் விக்ரம். அதுவும் அந்த கூனன் கதாபாத்திரம் எல்லாம் எப்படி நடித்தார் என்று யோசித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே மாறி உயிர் கொடுத்தார்.
அப்படி படத்தில் ஏகப்பட்ட உழைப்பை போட்டிருந்தாலும் படத்தின் மையக்கரு பெரிய அளவு ரசிகர்களை ஈர்க்காததால் அந்த படம் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் நடித்தார். மேலும் ஒரு சில வருடங்களாக சங்கரின் பேவரைட் நாயகியாகவும் ஷங்கரின் அடுத்தடுத்த படங்களில் தோன்றி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார்.
ஷங்கர் படங்களில் வாய்ப்பு கிடைக்காதா? என பல நடிகைகளை தேடி கொண்டிருக்கும் வேளையில் அவரது ஐ பட வாய்ப்பு கிடைத்தும் முன்னணி நடிகை சமந்தா நிராகரித்துள்ள காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
கிளாமர் காட்ட தயங்காத சமந்தா நீச்சல் உடையில் போட்டோ ஷூட் என்றதும் கொஞ்சம் ஆடிப் போய் விட்டாராம். நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜில் வலம் வரும் சமந்தா அநியாயத்திற்கு நீச்சலுடையில் மோசமாக நடித்தால் தன் மீது தவறான விமர்சனம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்த படத்தை நிராகரித்து விட்டாராம். அந்த படத்தில் நடித்த எமி ஜாக்சனுக்கு பின்னால் பெரிய அளவு தமிழ் சினிமாவில் வரவேற்பு இல்லை என்பது தெரிந்து சமந்தா பெருமூச்சு விட்டாராம்.
