fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்காக அஜித் பட வாய்ப்பை வேண்டாம் என உதறி தள்ளிய பிரபலம்.. ஹிட்டான பின் தலையில் துண்டு போட்ட சோகம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிக்காக அஜித் பட வாய்ப்பை வேண்டாம் என உதறி தள்ளிய பிரபலம்.. ஹிட்டான பின் தலையில் துண்டு போட்ட சோகம்!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திய  முன்னணி கதாநாயகன் தான் தல அஜித்.

இவருடைய வெற்றிப்படங்களில் ஒன்றான ‘காதல் கோட்டை’  படத்தில் தேவயானிக்கு பதிலாக அஞ்சு அரவிந்த் தான் ஒப்பந்தமாகியிருந்தாராம்.

ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் ரஜினி உடன் ‘அருணாச்சலம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அஜித் படத்தை புறக்கணித்துவிட்டாராம்.

இதற்கு காரணம் கேட்ட தயாரிப்பாளரிடம், ரஜினியுடன் நடிப்பது எனது நீண்ட கால ஆசை  என்று விளக்கமளித்துள்ளார் அஞ்சு அரவிந்த்.

எனவே 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் தான் அஞ்சு அரவிந்து.

1996ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் ‘பூவே உனக்காக’ படத்தில் அஞ்சு அரவிந்தின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இருப்பினும் இவர் தல அஜித்தின் ‘காதல் கோட்டை’ படத்தை புறக்கணித்தது மிகப்பெரிய தவறு என்று தற்போது உணர்ந்திருப்பார் ஏனெனில் அந்த அளவுக்கு ஹிட் கொடுத்த படம் தான் காதல் கோட்டை.

ஆகையால் இதுவரை யாரும் அறிந்திராத இந்த தகவலை அறிந்துகொண்ட தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை அதிகமாக பகிர்ந்து கொள்கின்றனர்.

Continue Reading
To Top