பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை

ஹிந்தி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் அவந்திகா ஷெட்டி. மங்களூரைச் சேர்ந்த இவர் ரங்கி தாரங்கா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவர் ராஜு கன்னடா மீடியம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை, ஆனால் படத்தின் படப்பிடிப்பு 25% முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் அவந்திகாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார்.

இதையடுத்து அவந்திகா தயாரிப்பாளர் சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னட சினிமா வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பக்கத்திலும் அவந்திகா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments

comments