Connect with us
Cinemapettai

Cinemapettai

ragava-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுடுகாட்டில் ஷூட்டிங் நடத்திய ராகவா லாரன்ஸ் படக்குழு.. பயத்தில் தலைதெறிக்க ஓடிய மூத்த நடிகை

தமிழ் சினிமாவில் பேய்களை வைத்து பணம் சம்பாதித்த நடிகர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான். அவர் ஆரம்பித்த காமெடி கலந்த பேய் படங்கள் தான் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் படங்களாக இருக்கின்றன.

ராகவா லாரன்ஸின் இந்த ரூட்டை பிடித்து சுந்தர் சியும் அரண்மனை என்ற பெயரில் ஏகப்பட்ட படங்களை எடுத்து விட்டார். அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்களும் காமெடி கலந்த பேய் படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளனர்.

அதேபோல் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி தயாரிக்கும் ருத்ரன் என்ற படமும் இதே மாதிரி திகில் கதையம்சத்தில் தான் உருவாகி வருகிறதாம். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும், அம்மா கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரிஜினல் சுடுகாட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதை முன்னாடியே பூர்ணிமா பாக்யராஜிடம் சொல்லாமல் விட்டு விட்டார்களாம் படக்குழுவினர். சூட்டிங் ஸ்பாட் இது தானா என கேரவன் வண்டியை திறந்து காலை எடுத்து வைத்ததே சுடுகாட்டில் தானாம்.

இதனால் பயந்துபோன பூர்ணிமா பாக்கியராஜ் உடனடியாக சூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் எனவும், தயவு செய்து வேறு ஏதாவது இடத்தில் செட் போட்டு எடுங்கள் என கூறிவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்பிச் சென்றுவிட்டாராம்.

poornima-rudran-movie

poornima-rudran-movie

இதனால் தற்போது படக்குழுவினர் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை கலைத்துவிட்டு செட் போடும் பணிகளில் இறங்கி உள்ளனர். விரைவில் படத்தை முடித்துவிட்டு இந்த வருடமே படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம் ருத்ரன் படக்குழுவினர்.

Continue Reading
To Top