விஜய்யுடன் அந்த குத்துப் பாட்டுக்கு ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன்.. குண்டை தூக்கி போட்ட கவர்ச்சி நடிகை

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பலரும் பிற்காலத்தில் பெரிய அளவு வாய்ப்பு இல்லாமல் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

அதுவும் முன்னணி நடிகர்கள் படம் என்றால் கண்டிப்பாக ஒரு குத்துப்பாடல் இருந்தே ஆகவேண்டும். அதில் வேறு ஏதேனும் நடிகையை கவர்ச்சியாக ஆட்டம் போட வைப்பது டைரக்டர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குருவி. உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக தயாரித்த படமும் இதுதான். மேலும் இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார்.

வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் சக்கை போடு போட்டது. அதிலும் குறிப்பாக விஜய்யின் ஓப்பனிங் பாடலாக அமைந்த குருவியோட பாட்டு கொளுத்துங்கடா வேட்டு என்ற பாடல் விஜய் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தது.

இந்த பாடலில் விஜய்யுடன் நடிகை மாளவிகா நடனமாடினார். அப்போது அந்த பாடலில் நடனம் ஆடும்போது மாளவிகா கர்ப்பமாக இருந்ததாக சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் போது எதற்கு இப்படி ஆட வேண்டும்? என ரசிகர்கள் தொடர்ந்து அவரை கேள்வி கேட்டு வந்தனர். ஆனால் அந்த கேள்விகளெல்லாம் தவிர்த்துவிட்டு கர்ப்பமாக ஆடினேன் என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.

malavika-kuruvi-cinemapettai
malavika-kuruvi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்