Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை திருமணம் செய்துகொள்ளாத நடிகைகள்.. அழகா இருந்தும் நடக்கும் சோகம்
சினிமாவைப் பொறுத்தவரையில் திருமணங்கள் என்பது சமீப காலமாக விளையாட்டுப் பொருளாக மாறி வருகிறது. இன்று திருமணம் செய்துகொண்டு ஆறு மாதத்தில் விவாகரத்து பெறுபவர்களும் உண்டு.
இதற்கிடையில் ஒருவருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளும், ஒருவருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கணவர்களும் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் சினிமாவில் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத நாயகிகள் அறிது. அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
கௌசல்யா
தொண்ணூறுகளின் தமிழ் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக உருவெடுத்தவர் கவுசல்யா. இன்று இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர். தற்போது 49 வயதாகும் நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

kowsalya
கோவை சரளா
பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்பதை ஆச்சி மனோரமாவுக்கு பிறகு இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பவர் கோவை சரளா. தற்போது இவருக்கு 57 வயதாகும் நிலையில் இன்று வரை திருமணத்தைப் பற்றி அவர் யோசித்தது கூட இல்லை என்கிறது சினி வட்டாரம்.

kovai-sarala
பூஜா குமார்
விஸ்வரூபம் படத்தின் மூலம் பிரபலமானவர் பூஜாகுமார். 42 வயதை தாண்டிய நிலையில் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

pooja-kumar
சுஷ்மிதா சென்
உலக அழகியாக 1994 ஆம் ஆண்டு அறியப்பட்டவர் சுஷ்மிதா சென். அன்று முதல் சினிமாவில் மிரட்டி வரும் இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 43 வயதான இவர் விரைவில் தன்னை விட வயது குறைவாக உள்ளவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

susmitha-sen
தபு
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தவர். இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. வயது47 தாண்டியது.

tabu
