தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ ஒரே வருடத்தில் பல படங்கள் நடிப்பது பெரிய விசயமல்ல, ஆனால் ஒரு ஹீரோயின் பல படங்கள் நடிப்பது அன்று முதல் இன்று வரை கடினமான ஒன்றாகவே உள்ளது.

ஏனெனில் எந்த ஒரு நடிகையையும் தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் புக் செய்வதில்லை. இதற்கு காரணம் அவர்களது கால்சீட் சொதப்பல், தாமதம், ரசிகர்களின் ஆதரவு, சம்பளம் என பல விஷயங்கள் இதோடு தொடோர்புள்ளவை.

இத்தனையும் கடந்து இந்த வருடம் அதிக படங்களில் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். ஒன்று நடிகை சமந்தா, மற்றொன்று நடிகை நிக்கி கல்ராணி. இருவரில் அதிக படங்கள் யார் நடித்து முதலிடத்தை பிடித்தவர் யார் என்று பார்ப்போம் வாங்க.

நடிகை சமந்தா:

Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா, அதே வருடம் இவர் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த மாஸ்கோவின் காவேரி படம் வெளியானது. தொடர் தோல்விப் படங்களை தந்து கொண்டிருந்த சமந்தாவிற்கு நான் ஈ படம் தமிழில் முதல் நல்ல வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியானார்.

கடந்த மாதம் நடிகர் நாகா அர்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை மணமுடித்தார். அதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த அனைத்து படங்களையும் முடிக்கும் முடுக்கில் ஓய்வின்றி இரவு பகலாய் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் இந்த வருடம் நடித்த, நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் ராஜூ காரி காதி 2, மெர்சல், ரங்கஸ்தளம் 1985, இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், மகாநதி, நடிகையர் திலகம். இதில் மகாநதியின் தமிழ் பதிப்பே நடிகையர் திலகம். ஆக மொத்தம் 7 படங்கள் நடித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி:

nikki galrani
nikki galrani

சரி நடிகை நிக்கி கல்ராணி திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.
மலையாளத்தில் முதலில் அறிமுகமாகி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியின் தங்கை என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழில் பெரிய வெற்றியோ, பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கவோ இன்றுவரை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நிக்கி அடுத்தடுத்து சரமாரியாக படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எவ்வளவு சம்பளம், எந்த நடிகர், என்ன கதாபாத்திரம் என்ற எந்த ஒரு கேள்வியும் கேட்பதில்லையாம், படத்தில் நடித்தால் போதும், தன் முகத்தை ரசிகர்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வரிசையாக படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி.

இவர் இந்த வருடம் நடித்த மற்றும் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், டீம் 5, நெருப்புடா, ஹர ஹர மகா தேவகி, கீ, பக்கா, கலகலப்பு 2. ஆக மொத்தம் 8 படங்கள்.

எனவே இந்த வருடம் அதிக படங்கள் நடித்து சாதனை படைத்த தமிழ் ஹீரோயின் என்ற பெருமையை பெறுபவர் நடிகை நிக்கி கல்ராணி.