Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல்ல உடம்ப குறை.. இல்லன்னா அம்மா, அக்கா ரோல்தான்.. பயத்தில் பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் இரண்டாவது ஹீரோயின் அல்லது பிளாஷ் பேக் ஹீரோயின் கதாபாத்திரங்களில் அதிகமாக காணப்படுவது அந்தப் பிரபலமான நடிகை. தொடர்ந்து இதே மாதிரியான வாய்ப்புகள் வருவதால் அப்செட்டில் உள்ளாராம் நடிகை. அதுமட்டுமில்லாமல் தன் நண்பர்களிடம் தான் அழகாக இருப்பதாகவும் எனக்கு மட்டும் ஏன் செகண்ட் ஹீரோயின் சான்ஸ் மட்டும் வருகிறது என புலம்பி உள்ளாராம்.
அதற்கு சினிமா நண்பர்களில் ஒருவர், அழகு முக்கியம் இல்லை என்றும் முதலில் சாக்குப்பை போல் இருக்கும் உனது உடம்பை குறைத்து ஸ்லிம்மாக மாறு எனவும் கூறியுள்ளார். போதாக்குறைக்கு இதை செய்யவில்லை என்றால் சினிமாவில் இருந்து உன்னை ஒதுக்கி விடுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இதைக் கேட்டதும் நடிகைக்கு தூக்கி வாரி போட்டது. இவ்வளவு நாட்களாக கதாபாத்திரங்களிலும் படங்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அதனால் உடல் கட்டுக்கோப்பில் எந்த ஒரு அவசியமும் தேவைப்படவில்லை எனவும் பொது மேடைகளில் கூறி வந்தாராம் அந்த பிரபல நடிகை.
ஆனால் தற்போது உடல் எடையே தனக்கு ஆப்பு வைத்து விட்டதாக எண்ணி எவ்வாறு உடலை குறைப்பது என முன்னணி நாயகிகள் பலரிடமும் யோசனை கேட்டு வருகிறாராம். காலம் கடந்தபின் அதெல்லாம் எதற்கு என கிண்டல் செய்யாத குறைக்கு ஒதுக்கி விடுகிறார்களாம் முன்னணி நாயகிகள்.
இருந்தும் உடல் எடையை குறைத்து முன்னணி நாயகியாக உயர்வேன் என அடம்பிடித்து தற்போது ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம். உண்மையிலேயே நாயகியின் நடிப்புக்கு முன்னால் முன்னணி நாயகிகள் அனைவரும் கையேந்தி நிற்க வேண்டும். ஆனால் உடல் கட்டுக்கோப்பில் மட்டும் நாயகி கொஞ்சம் மிஸ் ஆகி விட்டாராம்.
விரைவில் மீண்டு வருவேன் என சவால் விட்டு விட்டு நேராக ஜிம்முக்கு சென்றுவிட்டாராம் நாயகி. என்ன நடக்கபோகுதோ தெரிலையே!
