பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் ஒன்றாக சுற்றுவது வழக்கமான விஷயம். நடிகர் சயிப் அலிகான் மகள் சாராவும், அனில் கபூரின் மகன் ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இவர்களின் இந்த காதலை சயீப் அலிகானின் முதல் மனைவியும் சாராவின் அம்மாவான அம்ரிதாவிற்கு பிடிக்கவில்லையாம். ஹர்ஷ்வர்தன் கபூர் பெண்கள் விஷயத்தில் வீக் என்று பெயர் எடுத்தவர் என்பதால் அம்ரிதாவுக்கு இந்த கவலையாம்.

ஹர்ஷ்வர்தனுடான பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக படங்களில் கவனம் செலுத்து என்று அம்ரிதா சாராவிடம் கூற, சாராவோ தனது அம்மா பேச்சை கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.