Connect with us

Cinemapettai

இரண்டாவது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய VJ ரம்யா.. படை எடுக்கும் ரசிகர்கள்

vj-ramya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய VJ ரம்யா.. படை எடுக்கும் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா தனது இரண்டாவது திருமணத்தைப் பற்றி பேசியதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. ரம்யா சுப்ரமணியம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர்.

அதன் பிறகு அவ்வப்போது சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி என்ற படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

அதைத்தொடர்ந்து பிக் எப்எம்-ல் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்தார். தற்போது திரைப்பட இசை வெளியீட்டு விழா, புரோமோஷன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

2014 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையிலிருந்து விலகினார். ஆனால் அவரது திருமணம் ஓராண்டு கூட நிலைக்கவில்லை.

இதனால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் லைவ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் இரண்டாவது திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

உங்களுக்கு கருப்பான பையன் வேண்டுமா அல்லது வெள்ளையான பையன் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு ரம்யா, தனக்கு நிறம் ஒரு தடை இல்லை எனவும், நல்ல மனிதராக இருந்தால் போதும் எனவும் பதில் அளித்துள்ளார்.

இதனால் அவருக்கு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும் ரம்யா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top