Connect with us

Cinemapettai

இந்த அரசியல்வாதியால் தான் குழந்தை பெத்துகல.. விஜயசாந்தி வெளியிட்ட பகீர் தகவல்

vijaya-shanthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த அரசியல்வாதியால் தான் குழந்தை பெத்துகல.. விஜயசாந்தி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக மன்னன் படத்தில் நடித்திருப்பார். ரஜினிக்கு போட்டியான கதாபாத்திரத்தில் மிரட்டி தள்ளி இருப்பார்.

விஜயசாந்தி அரசியல் மீது கொண்ட ஈடுபாட்டினால் முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சமீபத்தில் மகேஷ் பாபுவுக்கு அம்மாவாக சரியில்லேறு நீகேவ்ரெவாறு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சரியில்லேறு நீகேவ்ரெவாறு ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது

இந்த படம் பொங்கல் வெளியீடாக வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இதுவரை ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தைக் கூறி தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, சுயநலமாக வாழ்க்கையில் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அரசியலில் ஈடுபடும் எவரும் சுயநலமாக யோசிக்க கூடாது என்பதற்காகவும் தன் கணவருடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல மக்களுக்காக தொண்டு செய்வதில் தன் முழு வாழ்க்கையையும் மனதார அர்ப்பணிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இவரது கொள்கையைக் கண்டு சினிமா வட்டாரங்கள் முதல் பொதுமக்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யூ ஆர் கிரேட் மேம்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top