fbpx
Connect with us

25 கிலோ உடல் இடையை குறைத்து, அடையாளம் தெரியாமல் ஒல்லி பெல்லியாக மாறிய வித்யூலேகா.. மிரண்டு போன கோலிவுட்

vidyullekha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

25 கிலோ உடல் இடையை குறைத்து, அடையாளம் தெரியாமல் ஒல்லி பெல்லியாக மாறிய வித்யூலேகா.. மிரண்டு போன கோலிவுட்

ஆண்களை விட  பெண் நகைச்சுவை நடிகர்கள் சொற்பமான எண்ணிக்கையிலேயே சினிமாவில் உதிக்கின்றன. அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் கோவை சரளாவை போன்று நகைச்சுவையில் பட்டைய கிளப்ப களம் இறங்கியவர் தான் வித்யூலேகா.

சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே  இவருடைய பப்ளி ஆன லுக் மற்றும் காமெடியால் தமிழ் ரசிகர்கள் பலரின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது திடீரென்று நடிகை வித்யூலேகா அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களால் இணையத்தையே தகதகவென பற்றி எரிய வைத்தார்.

இவர் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பஞ்சுமிட்டாய்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்த இடைவெளியில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன்னுடைய உடல் எடையை 86.5 கிலோவிலிருந்து 61.3 கிலோவிற்கு குறைத்து செம்ம ஸ்லிம்மாக ஹீரோயின் போலவே மாறியுள்ளார்.

ஒருவேளை திருமணத்திற்காக  உடல் எடையை குறைத்தாரா?  இல்ல, பட வாய்ப்புக்காக  உடல் எடையை குறைத்தாரா? என்று ரசிகர்கள் தலையை பிச்சுக்குற அளவுக்கு யோசிக்கின்றனர். ஏனென்றால் கடந்த மாதம் 26ம் தேதி இவருக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

vidyullekha-cinemapettai-2

vidyullekha-cinemapettai-2

வித்யூலேகாவின் படு கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் கமெண்ட் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் சினிமாவிற்கு இப்படி ரிஸ்க் எடுப்பதை பாராட்ட வேண்டியது மிக அவசியம் வாழ்த்துக்கள்!

Continue Reading
To Top