ராகவா லாரன்ஸ் இயக்குநராக அவதாரம் எடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படமான ‘முனி’ ஹிட் அடித்தது. வழக்கமான பேய்ப் படங்களில் இருக்கும் ஃபார்முலாவை மாற்றி, காமெடியோடு சேர்த்து இப்படத்தில் கொடுத்திருப்பார்.

Kanchana-2

இந்தப் படம் கொடுத்த வெற்றி ராகவா லாரன்ஸை காஞ்சனா, காஞ்சனா 2 என வரிசையாக படங்களை இயக்க வைத்தது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, எப்போது ‘காஞ்சனா- 3’ வரும் என ஆர்வமாக இருந்தனர் அவரது ரசிகர்கள்.

லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் 3 நாயகிகளில் ஒருவராக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய பேய் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் மாபெரும் வசூலை அள்ளியவர் இயக்குநர் லாரன்ஸ். தானே அப்படங்களில் நாயகனாக நடித்து, பேய் படங்களை மக்கள் ரசிக்கும்படி எடுத்து பெயர் பெற்றவர்.

oviya

தற்போது ‘காஞ்சனா 3’க்கு தயாராகிவிட்டார் லாரன்ஸ். இதிலும் தானே நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். 3 நாயகிகள் இதற்காக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்கள்.

இதில் முதன்மை நாயகியாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிகை வேதிகா நடிக்கிறார், மூன்றாவது நாயகியா நிக்கி கல்ராணி நடிப்பார் என கூறப்படுகிறது.

kanjana3

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், நடிகை வேதிகா பீடி புகைப்பது போல இரு புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தின் விளம்பரதிக்காக நடிகைகள் கையில் சிகரெட்டை கொடுப்பதும், பீடியை கொடுப்பதும் இப்போது பேஷனாகி விட்டது. ஆனால், இந்த புகைப்படம் சிவலிங்கா படத்தின் கன்னட படத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

இதோ அந்த புகைப்படம்,

vedhika