தல அஜித்தின் சிட்டிசன் பட நாயகிக்கு வந்த சோதனை.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க

தல அஜித் நடிப்பில் புரட்சிகரமாக பல சமூக விஷயங்களை புரட்டி எடுத்த திரைப்படம் சிட்டிசன். பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய சிட்டிசன் திரைப்படம், தல அஜித் அவர்களின் சினிமா வாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாகும்.

இந்த படத்தில் பிரபல பாடகியான வசுந்தரா தாஸ் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னை தொடர்ந்து வந்து அவதூறாக பேசிய டிரைவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காரணம் என்னவென்றால், பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறி சிக்னலை கடக்க முயன்ற காருக்கு இடைஞ்சலாக வசுந்தரா தாஸ் கார் நின்றுள்ளது. இதனால் கடுப்பான அந்தக் கார் ஓட்டுனர் வசுந்தராவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும் சுமார் நான்கு கிலோமீட்டர் வரை பின் தொடர்ந்து வந்து வண்டியை விட்டு இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

vasundhara-das
vasundhara-das

இதனால் பதற்றமடைந்த வசுந்தரா அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஓட்டுநர் பற்றி புகார் அளித்துள்ளார். மேலும் அவர் ஆத்திரமாக நடந்து கொண்டதால்தான் காரை விட்டு இறங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது காவல்துறையினர் அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாகனத்தை கண்டறிந்த பிறகும் அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது சற்றே காவல்துறையின் மெத்தனத்தை காட்டுகிறது.

Leave a Comment