Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிறுவயதில் பாலியல் கொடுமையை அனுபவித்த வாரிசு நடிகை.. அதிர வைக்கும் தகவல்
நடிகை வரலட்சுமி தானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன் என தெரிவித்துள்ள தகவலால பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனையை அவர்களால் சொல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் தங்கள் வாழ்வில் நடைபெற்ற பாலியல் பிரச்சனைகளையும், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தையும் அடிக்கடி ஊடகத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த பட்டியலில் புதிதாக இணைந்து இருப்பவர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி.
வரலட்சுமி, தனக்கும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று இருப்பதாக தெரிவித்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, மனம் திறந்து இருக்கும் வரலட்சுமி, என் வீட்டில் சிறுவயதில் சுந்தரமூர்த்தி என்பவர் வேலை செய்து வந்தார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஆனால், அதுகுறித்து என்னால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் வளர்ந்த பிறகே எனக்கு நடந்தது பாலியல் கொடுமை என்பதை புரிந்து கொண்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முக்கியமாக தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வை சொல்லிக்கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தைரியமாக அணுகும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு பெற்றவர்கள் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, சமீபகாலமாக பாலியல் கொடுமையால் இறந்த பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நியாயம் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறார். இப்பிரச்சனை குறித்த அவரது நிலைப்பாட்டையும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் சூழலிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் விதமாக சேவ் சக்தி என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
