Connect with us

Cinemapettai

வாணி போஜன் காட்டில் அடைமழை.. கைவசம் இத்தனை படங்களா?

vani-bhojan-cute

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாணி போஜன் காட்டில் அடைமழை.. கைவசம் இத்தனை படங்களா?

பிரியா பவானி சங்கரை தொடர்ந்து மற்றொரு சீரியல் நடிகையான வாணி போஜனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இவர் நடித்த எந்த படமும் இதுவரை ரிலீஸ் ஆகாத நிலையில் பட வாய்ப்பு குவிவதை கண்டு தமிழ் சினிமா உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

இவர் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா தயாரித்த முதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு தமிழில் லாக்கப் என்ற படத்திலும், ஓ மை கடவுளே என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.

மேலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, தனக்கு நிறைய படவாய்ப்புகள் வருவதாகும், மேலும் தனக்கு ஏற்ற கதைகளை மட்டுமே ஒப்புக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் ஓய்வு எடுக்க ஏற்ற வகையிலும் படங்களை ஒப்புக் கொள்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வாணி போஜனும் முன்னணி நடிகையாக வலம் வருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top