Tamil Cinema News | சினிமா செய்திகள்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் இணையும் த்ரிஷா
சோழ பேரரசு ராஜராஜசோழனின் வாழ்க்கையை தழுவி கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன், திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தில் புதிதாக திரிஷாவும் இணைந்துள்ளார். இந்த தகவலை அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் திரிஷா நடித்திருந்தார். இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, விக்ரம், ஜெயம் ரவி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் த்ரிஷாவும் இந்த கூட்ணியில் இணைந்துள்ளனர்.
இதனிடையே அமிதாப்பச்சனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்ததை நடந்து வந்ததாக சொன்னார்கள்.
ஆனால் அமிதாபச்சன் படங்களில் நடிப்பதற்கு ஏற்கனவே முழுக்கு போட்டுவிட்ட நிலையில் இப்படத்தில் நடிக்கவில்லையாம். விரைவில் பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்தும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரியவருமாம்.
