Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய த்ரிஷா
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மீம்ஸ்கள், போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை என திரிஷா குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே மீண்டும் பிரச்சனை வெடித்தது.
இந்நிலையில் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார். இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
