Tamil Cinema News | சினிமா செய்திகள்
அம்மாவான த்ரிஷா! வருத்தத்தில் ரசிகர்கள்
15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகையாக இருப்பது மிகவும் கடினம் குஷ்பூ சிம்ரன் போன்றவர்கள் இதனில் தாக்கு பிடித்தனர் ஜோதிகாவின் சேர்த்துக்கொள்ளலாம் ஜோதிகாவிற்கு சும்மா சொல்லு இந்த வரிசையில் இப்பொழுது த்ரிஷாவும் இருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த த்ரிஷா அடுத்து ஒரு படத்திலும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கப் போகிறார். பொதுவாக தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அம்மா கேரக்டரில் நடித்தால் அவருக்கு மார்க்கெட்டில் மவுசு இல்லை என்று அர்த்தம், ஆனால் த்ரிஷா இதை பற்றி எல்லாம் கவலை படவே இல்லை நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக அம்மாவாக என்ன, பாட்டியாக கூட நடிப்பேன் என்று கூறுகிறார்.
த்ரிஷாவின் அழகும் நடிப்பும் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட இப்பொழுது இன்னும் அதிகமாகவே இருக்கிறது. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 படம் இதற்கு உதாரணமாக சொல்லலாம் அந்த படத்தின் டீசரில் த்ரிஷா அவ்வளவு அழகாக இருப்பார். இயக்குனர் திருஞானம் இயக்கும் ஒரு படத்தில் திரிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் படத்தின் பெயர் ‘பரமபதம் விளையாட்டு’.
பரமபதம் விளையாட்டு படத்தில் த்ரிஷா ஒரே கேரக்டரில் இரண்டு வேறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒருவர் டாக்டராகவும் இன்னொருவர் அம்மாவாக நடிக்கிறார் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் அழகாக எடுத்துள்ளார்களாம். அதுவும் ஹாலிவுட் ஸ்டைலில் சண்டைக்காட்சிகள் இருக்குமாம். ஏற்கனவே த்ரிஷா நடித்த ஒரு பேய் படம் படு தோல்வியடைந்தது. இந்த படத்திலாவது நடித்து தாக்குப் பிடிப்பாரா என்று பார்க்கலாம்.
