நடிகை த்ரிஷா ‘மோகினி’ படத்தில் தேவி வைசாலி-வைஷ்ணவியாக நடிக்கிறார்.

நடிகை த்ரிஷா ‘அரண்மனை-2’, ‘நாயகி’ என சில ஹாரர் படங்களில் நடித்துள்ளார். தற்போது மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம்.

பேய் படம் என்றாலே கத்தல், கதறல், அலறல், மிரட்டல் என்றுதான் அதிரடியாக படமாக்குவார்கள். ஆனால் இந்த ‘மோகினி’ படம் அமானுஷ்ய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாம். அதோடு, இந்த படத்தில் வைசாலி-வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அதில் ஒருவர் பிளாஷ்பேக்கில் வந்து செல்வாராம். இந்த இரண்டு வேடங்களிலும் ஒன்றுக்கொன்று சாயல் இல்லாத வகையில், மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா.