கடந்த 2007ஆம் ஆண்டு தண்டாயுதபாணி என்ற தமிழ் படத்தை கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை வித்யா மோகன். அதைத்தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களை நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் கன்னடத்திலும் ஒரு சில படங்களில் நடித்தார்.
இருப்பினும் அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியை சந்திக்கவில்லை. எனவே மூன்று மொழிகளில் கதாநாயகியாக பெறமுடியாத பேரும் புகழையும் சீரியல் நடித்ததன் மூலம் வித்யா மோகனுக்கு கிடைத்திருக்கிறது. ஏனென்றால் வித்யா மேனன் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
அதன் காரணமாக இவர் சன் டிவியில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய வள்ளி என்ற சீரியலில் வெண்ணிலா, வள்ளி என்ற இரட்டை வேடத்தில் நடித்து சின்னத்திரை நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அத்துடன் மலையாளத்திலும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து அமோக வரவேற்பைப் பெற்றார்.
இவருடைய கணவர் வினு மோகன் அவர்களும் மலையாள நடிகர். ஆகையால் இவர்கள் இருவரும் நிவேதயம் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தமிழில் வள்ளி, அபியும் நானும், வானத்தைப்போல.
பூவா தலையா போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் வாய்ப்பு பெற்ற தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அத்துடன் வித்யா மோகன் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய மாடல் உடை அணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து முன்னணி சீரியல் நடிகை ஆக விளங்குகிறார்.