தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர் திரு 420 ‘ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பெங்களூரை சேர்ந்த நடிகை மேக்னா ராஜ், கன்னட படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது கன்னட இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் ‘ஜிந்தா’ என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இதில் ஆண்களை மேக்னா ராஜ் இழிவாக பேசுவது போல் ஒரு காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேக்னா ராஜ் வீடு அமைந்துள்ள பெங்களூருவில் சிலர் முற்றுகையிட்டு, அவரை மன்னிப்பு கேட்க கோஷமிட்டனர்.

அதிகம் படித்தவை:  தமிழில் பேசும் ரித்திகா சிங் !

அப்போது வீட்டில் இருந்த மேக்னா வெளியே வந்து, கதைக்கு தேவைப்பட்டதால் தான் இந்த காட்சி வைத்துள்ளதாகவும், நீங்கள் படம் வெளியாகியதும் படத்தை பார்த்து விட்டு என்னிடம் கூறுங்கள் என கூறினார்.

அதிகம் படித்தவை:  தீபிகாவை தொடர்ந்து கங்கனா படத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு ! உச்ச கட்ட எரிச்சலில் பாலிவுட்.

ஆனால் போராட்டகாரர்கள் தொடர்ந்து நடிகை மேக்னாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். நடிகையின் பதிலை அவர்கள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து பெங்களூர் போலீசார் அங்கு வந்து போராட்டகாரர்களை கலைத்தனர்.