Tamil Cinema News | சினிமா செய்திகள்
எவ்வளவு காசு கொடுத்தாலும் அதுல மட்டும் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன்.. அடம்பிடிக்கும் டாப்ஸி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. பிறகு தமிழில் பல படங்கள் நடித்தாலும் அஜித்துடன் நடித்த ஆரம்பம் படம் இவருக்கு மீண்டுமொரு அங்கீகாரத்தை கொடுத்தது.
அதன்பிறகு தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்து வந்தார். இடையில் பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் டாப்ஸி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாப்ஸி முக்கியமான விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன் எனக் கூறியது சினிமா உலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிறகுதான் புரிந்தது, அட்ஜஸ்ட்மெண்ட் என்பது தப்பான விஷயம் அல்ல என்றும் மரியாதை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு கணவராக வரக்கூடியவராக இருந்தாலும் அவரிடமும் மரியாதையை எதிர்பார்ப்பேன் எனவும், மரியாதை கொடுக்காவிட்டால் டைவர்ஸ் செய்யவும் தயங்க மாட்டேன் எனவும் பேட்டி கொடுத்துள்ளார்.
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!
