Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலியல் புகார் செய்தால் பட வாய்ப்பு கிடைக்காது.. தமன்னா வெளியிட்ட பளிச் பேட்டி
தமிழ்சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகி தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமாக்ஸ் மற்றும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட மனதில் நிற்கும்படி செய்துவிடுவார் தமன்னா.
பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்து சென்ற தமன்னாவுக்கு அதன்பிறகு வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் திரும்பவும் தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை தொடர ஆரம்பித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஆக்சன். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கி இருக்கிறார்.
சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் மீட்டு பற்றி கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கான பதிலை பளிச் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மீடூவில் புகார் கூறும் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. இருந்தும் நான் அதுபோன்ற பிரச்சனைகளை இதுவரை சந்திக்கவில்லை.
யார் யாருடன் எப்படி பழக வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து நட்பு பாராட்டி வருகிறேன். இருந்தும் சில நடிகைகள் மீடூவில் ஓப்பனாக கூறியதை மிகவும் வரவேற்கிறேன். ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு படவாய்ப்பு செல்லாததை நினைத்து வருந்துகிறேன் என்று தெளிவாக கூறியுள்ளார்.
