Connect with us

Cinemapettai

மாப்பிள்ளை தேடுகிறார் தமன்னாவின் அம்மா.. அதிர்ஷ்டம் யாருக்கு

tamannaah-marriage

Cinema News | சினிமா செய்திகள்

மாப்பிள்ளை தேடுகிறார் தமன்னாவின் அம்மா.. அதிர்ஷ்டம் யாருக்கு

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 12 வருடங்களாக சினிமா துறையில் நீடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளை ஐந்து ஆறு படங்களில் அல்லது ஐந்து ஆறு வருடங்களில் காணாமல் போகும் நிலையில் இவர் இன்னும் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா தமிழ் சினிமா பயணம் குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் அண்மையில் பேட்டி ஒன்று அளித்தார். ஏன் ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்து வந்தேன் இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது மற்றவர்களைப் போல் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என என்னைக் கேட்கிறார்கள்.

நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நிறைய நடித்து விட்டேன் . இன்னும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் காரணத்தினால்தான் எனது படங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

வீட்டில் எனக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார்கள் . எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் அதனால் மாப்பிள்ளை தேடுதலில் அவர் பிஸியாக இருக்கிறார் . திருமண விஷயத்தை என் பெற்றோர் முடிவுக்கே விட்டு விட்டேன்” இவ்வாறு தமன்னா கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top