Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலகிலேயே விலை உயர்ந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசளித்த பிரபலம்.. அம்மாடியோ!! இவ்வளவு விலையா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமான நடிகையாக கருதப்படுபவர் தமன்னா. சமீபகாலமாக இவரின் நடிப்பும் அழகும் மெருகேறி கொண்டே போகிறது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வரலாற்று படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் மற்ற அனைத்து கேரக்டர்களையும் விட தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலுவுள்ளதாக பிரபலங்கள் பாராட்டி கொண்டிருக்கின்றன.
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திர போராட்டத்திற்காக போராடும் பெண்மணி ஆகவும் நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண். இந்நிலையில் ராம் சரணின் மனைவியான உபாஸனா அவர்கள் தமன்னாவுக்கு விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த மோதிரம் உலகத்திலேயே மிகப்பெரிய மோதிரங்களில் ஐந்தாவது இடமாகும். இதனுடைய இந்திய மதிப்பு சுமார் இரண்டு கோடிக்கு மேல் ஆகும்.
இப்படிப்பட்ட விலை உயர்ந்த பரிசு ராம் சரணின் மனைவி தமன்னாவின் நடிப்புக்காக ஆசைப்பட்டு வாங்கி கொடுத்துள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
A gift for the super @tamannaahspeaks
from Mrs Producer 😉❤️🥳
Missing u already. Catch up soon. #SyeraaNarashimaReddy pic.twitter.com/rmVmdwWNAd— Upasana Konidela (@upasanakonidela) October 3, 2019
