Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை பாராட்டித் தள்ளிய பிரபல நடிகை.! அவர் சொல்ற காரணமும் சரிதான்
நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர உள்ளது. அனைத்து விளம்பர வேலைகளும் போய்க் கொண்டிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர்களைப் பார்த்து பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இதில் அமலாபால் தற்போது ஆடை போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், அஜித்தை பாராட்டியுள்ளார்.
சமூக அக்கறையுடன் இதுபோன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும். அது மட்டுமல்லாமல் கருத்தை மக்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்யும்.
இந்தக் கதையில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் வழக்கறிஞராக தல அஜித் நடித்து இருப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு ஆழமான கருத்தை கூறுவது மக்களிடையே கண்டிப்பாக கொண்டு போய் சேரும் என்று பாராட்டி உள்ளார். இது அஜித் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது.
