தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தில் நடிக்கும் போதே பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டன. இதை இருவரும் உடனடியாக மறுக்கவில்லை.

அதிகம் படித்தவை:  “பிரபல இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்” – நந்திதா ஸ்வேதா குமுறல் .

இதுகுறித்து கடந்த வாரம் அனுஷ்கா தெரிவித்த போது, நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் கடுப்பான அனுஷ்கா தன்னை பற்றி தவறான செய்திகள் பரப்பினால் அவர்களை சட்டத்தின் மூலமாக சந்திப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.