கொரானா வைரஸ் தாக்கியதை போல் மாறிய சுப்பிரமணியபுரம் ஸ்வாதி.. தோல் சுருங்கிய புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் அறிமுகமானவர் சுவாதி. அதன்பிறகு போராளி என்ற படத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். ஜெய்யுடன் சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இறுதியாக கிருஷ்ணா ஜோடியாக யாக்கை என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சற்றே பிரபலமானவர். இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சுவாதி திருமணத்திற்குப் பிறகு சற்று உடல் எடை கூடினார். இதனால் ஆன்ட்டி போல் இருக்கிறீர்கள் என யாரோ கலாய்த்து விட்டார்கள் போல.

உடனடியாக ஜிம்முக்குச் சென்று உடல் எடையை குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால் அது, இப்படி மோசமாக முடியும் என்று அவர் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார். ஸ்வாதி தற்போது வயதான பாட்டியை போல் தோல் சுருங்கி காணப்படுகிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

swathi-reddy
swathi-reddy

Leave a Comment