நடிகை சுனைனா தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை சுனைனாவுக்கு நல்ல நடிகை என்ற அங்கீகாரத்தை தந்த படம் ‘நீர்ப்பறவை’. அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. பின்னர் அவர் நடித்த ‘வன்மம்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களும் தோல்வியடைந்தது. இருப்பினும், தற்போது ‘தொண்டன்’ படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாக நடித்துள்ளார்.

அதேபோல், கௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சுனைனா. இந்த கேரக்டருக்காக சரியான நடிகை வேண்டும் என்று தேடி வந்த கௌதம்மேனன், எதேச்சையாக ஒருநாள் தொண்டன் படத்தின் போஸ்டர்களின் சுனைனாவை பார்த்திருக்கிறார். அதையடுத்து, உடனடியாக சுனைனாவை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

‘கவலை வேண்டாம்’ படத்தில் தன்னை டம்மி பண்ணி விட்டதாக பீல் பண்ணினார்சுனைனா. இப்போது ‘தொண்டன்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என இரண்டு பெரிய டைரக்டர் களின் படங்களில் நடித்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார்.