சந்தேகத்தால் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார்த்திக், சத்யராஜ் படம் என்றாலே அம்மணி தான்

சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் பல நடிகைகளின் சொந்த வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. வெகு சில நடிகைகளே தங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். சில நடிகைகளுக்கு அந்த மகிழ்ச்சி எட்டாக்கனியாகவே இருந்து விடுகிறது.

அப்படி திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து வரை சென்று தற்போது தனிமையில் காலத்தை கழித்து வருபவர்தான் நடிகை சுகன்யா. 90 களில் மிகவும் பிரபலமாக இருந்த இவர் புதுநெல்லு புதுநாத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் பிரபு, கார்த்திக், கமல், சத்யராஜ் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் இவரின் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் போன்ற பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருக்கிறது.

சில காலங்களுக்குப் பிறகு புது நடிகைகளின் வரவால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தது. அதனால் இவர் கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த திருமண வாழ்க்கை நீடிக்காமல் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. இதற்கு காரணம் சுகன்யா திருமணத்திற்கு பிறகும் சின்னத்திரையில் நடித்தது தான். இதனால் இவருக்கும், இவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமானது. ஒரு கட்டத்தில் தன் மீது சந்தேகப்படும் கணவரின் வார்த்தைகளை தாங்க முடியாத சுகன்யா அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு அவர் இன்னொரு திருமணத்தை பற்றி யோசிக்காமல் திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது 52 வயதாகும் சுகன்யா முதல் திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Next Story

- Advertisement -