Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தளபதி பெயரில் போலி ரசிகர்கள்.. இதுகூட தெரியாமல் அஜித் மீது காண்டாகும் குஷ்பு
என்னைக்கு சமூக வலைதளங்கள் வளர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே பல பிரச்சனைகளும் உடன் வளர்ந்துள்ளது. அதில் ஒன்றுதான் ரசிகர்கள் சண்டை. சமீபகாலமாக ரசிகர்கள் தங்களது ஹீரோக்களை மாற்றி மாற்றி திட்டிக் கொள்வது போரடித்து விட்டது போல
நேரடியாக நடிகைகளை வச்சு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகள் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதுவும் அரசியலில் உள்ள நடிகைகள் என்றால் அவ்வளவுதான்.
சமீபத்தில் கூட நடிகை குஷ்புவை பற்றி தல ரசிகர் ஒருவர், அவதூறாக பேசியதாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இதற்கு அஜித் வெட்கப்படவேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் நடிகை கஸ்தூரியை விஜய், அஜித் ரசிகர்கள் குத்தகைக்கு எடுத்து விட்டனர், இஷ்டத்திற்கு அவரை கண்டபடி வசை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவரும் பல முறை ட்விட்டர் வாயிலாக தல அஜித் இடம் கோரிக்கை வைத்து வருகிறார்.
ஆனால் உண்மையிலேயே இது தீவிர ரசிகர்கள் செய்கிற வேலை மாதிரி தெரியவில்லை, சிலரது பெயரில் போலி அக்கவுண்ட்களை ஓபன் செய்து கொண்டு அதன்மூலம் நடிகைகளை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசி வருகின்றனர்.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இப்போ ஒரு அஜித் ரசிகர் விஜய் ஃபேன் எனவும், விஜய் ஃபேன் தான் ஒரு அஜித் ஃபேன் எனவும் ட்விட்டரில் போலி அக்கவுண்ட்களை திறந்து அதன்மூலம் நடிகர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கூட இருக்கலாம்.
இருந்தாலும் இவர்களிடம் நடிகைகள் மாட்டிக்கொண்டு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை!
