Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த நோயினால் தான் நடிகை ஸ்ரீதேவி இறந்து போனாரா? வெளிவந்த மறைக்கப்பட்ட உண்மை
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. என்னதான் இன்றைய லேடி சூப்பர் ஸ்டார், கனவுக்கன்னி என பலர் பெயர் வைத்துக் கொண்டாலும் ஒட்டுமொத்த அம்சமும் ஒருங்கே பெற்ற நாயகி.
கமல், ரஜினி என 80, 90களில் இவர் ஜோடி போடாத ஆட்களே கிடையாது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளுக்கும் ஒரே லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு உறவினரின் திருமணத்திற்கு வெளிநாடு சென்ற போது அங்கேயே உயிரிழந்தார்.
மேலும் இவர் மாரடைப்பினால் பாத்ரூமில் தண்ணீருக்குள் மூழ்கிய இருந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டது. மேலும் ஸ்ரீதேவி மரணத்தில் பலரும் சந்தேகப்பட்டு கேஸ் போடுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேவிக்கு ஏற்கனவே இரண்டு முறை ரத்தக்கொதிப்பு வந்ததாக தெரிகிறது. மேலும் உறவினர்களின் திருமணத்தின் போது ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் கவனிக்க ஆள் இன்றி பாத்ரூமில் உள்ள குளிக்கும் தொட்டியில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் மூச்சு விட முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி இறந்துவிட்டார் என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
