Tamil Cinema News | சினிமா செய்திகள்
உதயநிதியா? யார் அது? சர்ச்சையால் கோமாவுக்கு போன ஸ்ரீ ரெட்டி.. அரசியல் அதிரடி
சினிமாவின் முக்கிய புள்ளிகளை குறிவைத்து தாக்குவது ராணுவத்தை விட மோசமானவர் ஸ்ரீ ரெட்டி. இவர் வெளிப்படையாக நடிகர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இதனால் பல நடிகர்களின் பெயர்கள் மோசமான நிலைமையில் உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் மாட்டியவர் உதயநிதி ஸ்டாலின். ஸ்ரீ ரெட்டி ட்விட்டர் பக்கத்தில் இருந்து உதயநிதி தன்னுடன் ஒரு இரவை கழித்ததாகவும், மேலும் தனக்கு பட வாய்ப்பு தருவதாக உறுதி அளித்ததாகவும் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இன்றைய பிரஸ்மீட்டில் அதைப் பற்றி கேட்டபோது, உதயநிதியா? அது யாரு? என 60 வருடம் கோமாவில் இருந்த மாதிரி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள் மேலும் துருவிக் கேட்டபோது, தன் பெயரில் பல போலி கணக்குகள் இயங்கி வருவதாகவும், அதை தடை செய்யச் சொல்லி சைபர் கிரைம் போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
இறுதியில் கடைசியாக டிவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அது என்னவென்றால் விரைவில் தமிழகத்தில் அரசியலுக்கு வருவதாக வும், தமிழக மக்களுக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் மேன்மேலும் சந்தேகங்கள் வலுத்து கொண்டே போகின்றன. என்ன ரெடியா காரு.. அடுத்தது உங்க லிஸ்ட்ல யாரு?
