ஸ்ரீ ரெட்டி

ஆந்திராவில் சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகையுமான ஸ்ரீரெட்டி. இவருக்கும் பரபரப்புக்கும் என்றுமே பஞ்சம் கிடையாது. தெலுங்கு படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இவர், தனக்கு சினிமா வாய்ப்பு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி பலர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

ஸ்ரீ லீக்ஸ்

கடந்த வருடத்தில் தமிழ் நாட்டில் பரபரப்புக்கு சுச்சி லீக்ஸ் மூலம் நமது தமிழ் நடிகர்கள், நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. அதே பாணியில் ஸ்ரீ லீக்ஸ் என்ற தலைப்பில் தன்னை அனுபவித்து விட்டு ஏமாற்றி சென்றவர்களின் பிரபலங்களின் பெயர்கள் மற்றும் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீ ரெட்டி. மேலும் சில போட்டோக்களையும் தன் பேஸ் புக்கில் அப்லோட் செய்தார்.

sri reddy

 

இதனிடையே, பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் பவன் கல்யாண் ஹைதராபாத் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார். இதன் பேரில், ஸ்ரீரெட்டி மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தெலங்கானா முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தார் ஸ்ரீரெட்டி. முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தான் நிர்வாண போராட்டம் நடத்துவேன் என்றும் அறிவித்திருந்தார். நடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பர் பகுதிக்கு நேற்று மதியம் 1 மணியளவில் வந்தார் ஸ்ரீரெட்டி . யாரும் எதிர்பாராத வகையில், துப்பட்டா, மேலாடை, பேன்ட் என ஒவ்வொன்றையும் கழற்றி எரிந்தார். கிட்டத்தட்ட, அரை நிர்வாண கோலத்துக்கு மாறி, அந்த அலுவலகத்துக்கு வெளியே உட்கார்ந்து, தன் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

Sri Reddy
Sri Reddy
Sri Reddy

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விஷயம் அறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, ஸ்ரீ ரெட்டியை கைது செய்தனர்.