நடிகரை மயக்கி பண்ணை வீடே கதியாக கிடக்கும் நடிகை.. வாரிசு வளராமல் இருந்தால் சரிதான்

பல மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த வாரிசு நடிகை அடிக்கடி ஏதாவது ஒரு கிசு கிசுவில் சிக்கி விடுவார். அந்த வகையில் இவர் லேட்டஸ்ட்டாக ஒரு பிரபல நடிகருடன் ரொம்பவும் நெருக்கம் காட்டி வருவதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக அந்த நடிகர் நடிகையின் அழகில் மயங்கி சதா சர்வ காலமும் அவருடன் தான் பொழுதை கழித்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் நடிகைக்காக பண்ணை வீடு உட்பட பல விலை மதிப்புள்ள பரிசு பொருட்களையும் வாங்கி குவித்து கொண்டிருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் அந்த பண்ணை வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்களாம். மேலும் மணி கணக்கில் போன் பேசுவது, அடிக்கடி சந்தித்துக் கொள்வது என்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கும் இவர்களை பற்றி தான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக கிடைக்கிறது. மேலும் இப்படி அன்பை பரிமாறிக் கொள்ளும் அவர்கள் வாரிசு அளவுக்கு போகாமல் இருந்தால் சரி தான் என்று சத்தம் இல்லாமல் பலரும் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாக நடிகைக்கு எந்த திரைப்படங்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனிடையே அவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி அவருடைய வீட்டிலும் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை ரகசியமாக நடிகருடன் உறவை வளர்த்துக் கொண்டிருப்பது அவருடைய வீட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.