Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என் மீது கஞ்சா வழக்கா? ஒரே பெயரை கொண்டிருப்பதால் நடிகை சோனியா அகர்வாலுக்கு நேர்ந்த மன உளைச்சல்.. ட்விட்டரில் பதிலடி!

தமிழ் சினிமாவில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த கதாநாயகிதான் நடிகை சோனியா அகர்வால். அதன்பின் இவர் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் நடித்து, அதன்பின் அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் சோனியா  அகர்வாலுக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை.

இருப்பினும் சின்னத்திரையிலும், ஒரு சில படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு ஆடுவதில் கவனம் செலுத்தினார்.எனவே தற்போது தன்னுடைய முகம் மற்றும் உடலிலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, புது தோற்றத்தில் மின்னுகிறார் சோனியாஅகர்வால். இந்நிலையில் கன்னட நடிகையான சோனியா அகர்வால் வீட்டில் சுமார் 40 கிலோ கஞ்சா போலீசாரால் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரே பேரை கொண்டிருப்பதால் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த சோனியா அகர்வாலின் புகைப்படத்தை வைத்து ஊடகங்களில் தவறான செய்தியை பரப்பியதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள்ளார் சோனியா அகர்வால்.

இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொலைபேசி வாயிலாகவும், குறுஞ் செய்திகள் மூலமும் இடைவிடாது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறதாம்.

soniya-agarwal-cinemapettai

soniya-agarwal-cinemapettai

‘ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் என் மீது அவதூறு பரப்பியவர்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று சோனியா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

soniya-twit

soniya-twit

எனவே தொடர்ந்து திரை உலகில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
To Top