Connect with us

Cinemapettai

இரண்டு முறை காதல் தோல்வி.. தன் சுயசரிதை புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்.. நடிகை சோனா

sona-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டு முறை காதல் தோல்வி.. தன் சுயசரிதை புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்.. நடிகை சோனா

தல அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்னர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகையாக மாறிய பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பெயரும் புகழும் தொடர்ந்து வர மற்றவர்களை போல் பார்ட்டி போன்ற பழக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டார்.

பெரும்பாலான படங்களில் இவருக்கு கவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து வந்ததால் பணத்திற்காக வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாயிற்று என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் வருவதில்லை என யாரோ கொளுத்தி போட்டு விட்டார்கள் போல.

உடனடியாக தன்னை சந்திக்க வரும் பத்திரிக்கையாளர்களிடம் அதனை  மறுத்தார். சோனா 2018ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது 4 படங்கள் ரிலீஸுக்கு ரெடி ஆக இருப்பதாக அவரே கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும் சோனா கூறியதாவது, என் வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவருடன் 6 வருடங்கள் உயிருக்குயிராக பழகினேன். இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன். அந்த 2 காதலும் தோல்வியில் முடிந்தது.

மேலும் எனக்கு 2 கடமைகள் இருக்கிறது. ஒன்று, என் தங்கை திருமணம். இன்னொன்று, ஒன்றுவிட்ட இன்னொரு தங்கையின் திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

என் சுயசரிதையை நான் எழுதி முடித்து விட்டேன். அதில், நிறைய முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அதை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறேன். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், வெளியில் எங்கும் போக முடிவதில்லை. நான்கு சுவர்களை பார்த்தபடி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். இப்போதைக்கு அந்த 4 சுவர்கள்தான் என் நண்பர்கள்.

இவ்வாறு சோனா கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top